MyV3ads Scam ஒரு பார்வை..!

MyV3ads Scam (மோசடி)ஒரு பார்வை..!
விளம்பரம் பார்த்தால் பணம்,ஆள் சேர்த்துவிட்டால் ரெபரல்(referral commission)கமிசன்,12 லெவல்,கோடி, கோடியாய் வருமானம் இதான் இந்த MLM மோசடியோட பார்முலா..! சட்டத்தில் இருந்து தப்பித்துக்கொள்ள ஹெர்பல் மருந்துகள் விற்க்ககூடிய நிறுவனமாக பதிவு செய்துவிட்டு இயங்கி வருகின்றன..! 

ஆனாலும் இந்த நிறுவனம் பதிவு வேறு ஒரு category.! 
இந்தியாவுல 2019க்கு முன்பு வரை பல நிறுவனங்கள் MLM money rotation மட்டும் வைத்துக் கொண்டு இயங்கி வந்தன.. அதிகப்படியான குற்றசாட்டுகளுக்கு பின்னர் முதலீடு செய்த கூடிய பணத்திற்கு ஈடாக பொருட்களை கொடுக்காமல் போனதால் MLM எல்லாம் scam (மோசடி) என அறிவிக்கபட்டது.. பணம் மட்டுமே பிரதானமாக வைத்து இயங்ககூடிய MLM நிறுவனங்கள் அதில் இருந்து தப்பித்துக்கொள்ள ஹெர்பல் பொருட்கள்,நேப்கின்,மளிகை பொருட்கள் வைத்து பூசி மொழுகி  அதே money rotation வேலையை செய்ய துவங்கின அதில் ஒன்று தான் இந்த myv3ads..! 

2016-2020 கால கட்டத்தில் Apex digital ads இந்த பெயரில் விளம்பரம் பார்த்தால் வருமானம்,ரெபரல் வருமானம்,கோடி கோடியா சம்பாதிக்கலாம் என l அந்திர மாநில பதிவோடு ஒரு MLM சக்கைபோடு போட்டுச்சி..ப்ளே ஸ்டோரில் apex digital channel னு ஆப் வச்சி நடத்தினார்கள்,

 Myv3adsல இப்ப நடக்குற கூத்து எல்லாம் அப்பவே நடந்துச்சி... அன்ன ஹசாரே எல்லாம் சந்தித்து வீடியோக்கள், கெளரவ டாக்டர் பட்டம், மீட்பர் சுரேஸ் இப்படி பல பட்டங்கள் கொடுத்தார்கள் மோசடிகள் நடந்தேறியது.. ஒரு நாள் கடைய மூடிவிட்டு எஸ்கேப்... பின்னர் வழக்கம் போல மக்கள் காவல்துறை,பொருளாதார குற்றபிரிவுல புகார் குடுத்து போராட்டம்,அரசு எங்கள கண்டுகொள்ளவில்லை என புலம்பி அலைந்தார்கள்... போன பணம் போனதுதான்..! ஈரோட்டில் 2 முகவர்களை கைது செய்தார்கள்.. அதில் ஏமார்ந்த மக்கள் இன்றும் மீண்டு வரமுடியாமல் இருக்கிறார்கள்...! 

அதே நிறுவனத்தின் அதே பார்முலாவை அப்படியே எடுத்துக் கொண்டு வந்து இன்று மோடி மஸ்தான் வேலை காட்டிக்கொண்டு இருக்கும் இன்னோரு பிராடு நிறுவனம் தான் MYV3ads..! உலக பொருளாதார காட்பாதர், 5 டாக்டரேட்,5 மாநில கவர்னர் விருது, குருஜி இப்படி எல்லாம் கொரளி வித்தை காட்டிக்கொண்டு இருக்கிறார்கள்..! இந்த வீடியோ எடிட் எல்லாம் பார்த்தாலே நல்லா புரியும்..! 

இந்த மாதிரியான MLM எல்லாம் விரைவில் மக்கள் மத்தியில் நம்பிக்கை தன்மையை ஏற்படுத்த காவலர்கள்,ஆசிரியர்கள், தொலைகாட்சி தொடர் பிரபலங்கள்  பணம் முதலீடு செய்திருப்பதாக மக்களை நம்பவைத்து மோசடியில் ஈடுபடுகின்றனர்..!

 உதாரணத்திற்கு...! 

Myv3ads நெட்வர்க் மார்கெட்டிங் பிளான்..! இது Basic member ப்ளானாம்...! இதுல ஒரு பேசிக் மெம்பரே 10வது லெவல்ல பக்கத்து கிரகத்தில் இருந்து ஏலியன் எல்லாம் பிளானில் சேர்க்க வேண்டியது இருக்கும்..! 

இன்னும் silver,gold,diamond,crown மெம்பர் பிளான் எல்லாம் இருக்கு..அவர்கள் எல்லாம் பக்கத்து கேலக்சியில் போய் ஆள் சேர்த்தால் தான் பிளான் complete செய்ய முடியும்...!

இந்த money circulation banning Acti இல் இருந்து தப்பிக்க தான் இந்த அயுர்வேத பொருட்கள் வாங்கி scheme இல் சேரலாம் என்ற ஜிம்மிக்ஸ் வேலை..! மற்றபடி எப்பவும்போல money rotationதான் இந்த விளம்பரம் பார்த்தால் காசு
 MLM concept...! 



இதை போலவே,இதை பின்பற்றி விளம்பரம் பார்த்தால் வருமானம் என்று இயங்கி வரும் நிறுவனங்கள் Royalo - சென்னை தலைமை இடம், SBO - திருவண்ணாமலை தலைமை இடம்,
இதைபோலவே இயங்கி ஏற்கனவே மோசடி செய்து தற்போது வேறு பெயரில் இயங்கும் MLM நிறுவனம் Fourkart..! இப்படி ஏகப்பட்ட நிறுவனங்கள் தற்போது இயங்கி வருகிறது..

மக்களே உஷார்.....

இப்படிக்கு

இவன்

துரை....m

Comments